General News

Tuesday, May 22, 2012

பி.ஜே. அவர்களுக்கு..

அஸ்ஸலாமு அலைக்கும்...


நீங்கள் ஜாகிர் நாயக் அவர்களை காபிர் என்று சொன்னதாக த.மு.மு.க சகோதரர் கூறுகிறார் இதற்கு உங்கள் பதில்...
 

 (இங்கே கிளிக் பண்ணவும் ) ...

                                                           ---( source from ONLINE PJ ) 



Wednesday, March 21, 2012

மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா?
கேள்வி 1: ஒரு ஆண் ஒரு பெண்ணிருந்து மனிதன் படைக்கப் பட்டான் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் சார்லஸ் டார்வின் என்ற விஞ்ஞானி மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்று நிரூபித்துள்ளார். இதற்கு மாற்றமாக இஸ்லாம் கூறுவது அமைந்துள்ளது என எனது மாற்று மத நண்பர் கேட்கிறார்!
கேள்வி 2: உலகம் இயற்கையாகவே தோன்றியது. முதலில் புழு பூச்சிகள் உண்டாயின. அவற்றில் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு ஒரு வித குரங்குகள் தோன்றின. அக்குரங்குகள் மேலும் வளர்ச்சியடைந்து மனிதனாகப் பரிணாம வளர்ச்சி பெற்றன என்று எனது மாற்று மத நண்பர் கூறுகிறார். இது சரியா?
 
பதில்: பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவானவன் தான் மனிதன் என்பது டார்வினின் தத்துவம்.
கடவுளை மறுப்பதற்கு இந்தத் தத்துவம் உதவுவதால் டார்வினின் கொள்கையைச் சிலர் ஏற்றிப் போற்று கிறார்களே தவிர, அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் பட்ட உண்மை அல்ல. வெறும் அனுமானமேயாகும்.
சில உயிரினங்கள் காலப் போக்கில் வேறு உயிரினமாக வளர்ச்சி பெற்று வந்தன. பல கோடி ஆண்டுகளில் குரங்கு என்ற இனமாக ஆனது. அதன் பின்னர் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் குரங்கு பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் என்ற படைப்பு உருவானது என்பது தான் டார்வினின் கொள்கை!
எந்தக் குரங்காவது மனிதனாக மாறியதைப் பார்த்து விட்டு டார்வின் இப்படி முடிவு செய்தானா என்றால் நிச்சயமாக இல்லை.
குரங்குக்கும், மனிதனுக்கும் இடையே உருவ அமைப்பில் மிகுந்த ஒற்றுமை இருப்பது தான் டார்வினின் இந்த அனுமானத்துக்குக் காரணமாக அமைந்தது எனலாம்.
அறிவியல் அறிவு குறைவாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இதை நம்பினால் அதில் ஆச்சர்யம் இல்லை. இன்றைய அறிவியல் உலகில் அதை நம்புவது பைத்தியக்காரத்தனமாகவே இருக்கும்.
உருவ அமைப்பில் வேண்டுமானால் குரங்கு, மனிதனுக்கு நெருக்கமான வடிவம் பெற்றிருக்கலாம். ஒரு மனிதனின் இரத்தத்தை இன்னொரு மனித னுக்குச் செலுத்துகின்ற காலத்தில் நாம் வாழ்கிறோம்.
மனித இரத்தங்கள் கிடைக்காத சூழ்நிலையில் வேறு உயிரினங்களின் இரத்தத்தை மனிதனுக்குச் செலுத்த முடியுமா என்று ஆய்வு செய்தனர். குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இரத்தமும் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமானதாக இல்லை.
பன்றியின் இரத்தம் தான் மனிதனின் இரத்தத்துடன் அதிக அளவு பொருந்திப் போகிறது. அநேகமாக எதிர்காலத்தில் மனிதனுக்கு பன்றியின் இரத்தம் செலுத்தப்பட முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தாலும் அவ்வாறு செலுத்த முடியாது என்று முடிவு செய்தாலும் எந்த உயிரினங்களின் இரத்தத்தை விடவும் பன்றியின் இரத்தம் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமாகவுள்ளது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
மனிதன் குரங்கிருந்து பரிணாமம் பெற்றவனாக இருந்தால் குரங்கின் இரத்தம் தான் மனிதனுடைய இரத்தத்துக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்க வேண்டும். ஆடு, மாடு போன்ற பிராணிகளின் இரத்தம் மனித இரத்தத்திலிருந்து எந்தளவு வேறுபடுகிறதோ அதே அளவுக்கு குரங்கின் இரத்தமும் மனித இரத்தத்திலிருந்து வேறுபட்டுள்ளது.
குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்கவே முடியாது என்பதற்கு மறுக்க இயலாத சான்றாக இந்தக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.
உருவ அமைப்பை வைத்து எதிலிருந்து பிறந்தான் என்று முடிவு செய்வதை விட அறிவியல் பூர்வமான இந்தக் காரணத்தின் அடிப்படையில் முடிவு செய்வதே சரியானதாகும்.
இன்றைக்கும் கூட தகப்பனின் வடிவத்தில் மகன் இல்லாத போது டி.என்.ஏ. சோதனை மூலம் இவன் தான் தந்தை' என்று முடிவு செய்கிறோம். வடிவத்தைக் கணக்கில் கொள்வதில்லை.
டார்வின் காலத்தில் இரத்தங்களின் மூலக்கூறுகளை வகைப்படுத்தும் அறிவு இல்லாத போது ஊகமாக அவன் சொன்னதை மன்னிக்கலாம். அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்திலும் அதைத் தாங்கிப் பிடிப்பது சரி தானா?
இருதய மாற்று அறுவையிலும் இன்று மனிதன் முன்னேறி வருகிறான். இதயம் செயல்பாடில்லாமல் போனால் செயற்கை இதயம் பொருத்தக்கூடிய அளவுக்கு முன்னேறி விட்டான்.
வேறு பிராணிகளின் இதயம் மனிதனுக்குப் பொருந்துமா என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பொருந்தினால் எத்தனையோ இதய நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும்.
ஒவ்வொரு பிராணியின் இதயத்தையும் ஆராய்ச்சி செய்த போது குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இதயமும் மனித உடலுக்குப் பொருந்தாது என்பதைக் கண்டறிந்தனர். ஆச்சரியமாக பன்றியின் இதயம், மனிதனின் இதயத்துடன் பெருமளவு ஒத்துப் போவதைக் கண்டுபிடித்துள்ளனர். பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தும் நிலை ஏற்பட்டாலும், அது சாத்தியமற்றது என கண்டுபிடிக்கப்பட்டாலும் மற்ற பிராணிகளின் இதயத்தை விட பன்றியின் இதயம் மனித இதயத்துக்கு நெருக்கமாக இருப்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
மனிதன் எந்தப் பிராணியிலிருந்தாவது பரிணாமம் பெற்றான் என்று கூறுவதாக இருந்தால் பன்றியிலிருந்து பரிணாமம் பெற்றான் என்று கூறுவதே அதிகப் பொருத்தமாகும்.
டார்வின் கூறுவது போல் உடலமைப்பை அடிப்படையாகக் கொள்வதை விட உள்ளுறுப்புகளின் அமைப்பை அடிப்படையாகக் கொள்வது அறிவியலுக்கு அதிக நெருக்கமுடையதாகும்.
இன்றைய மனிதன் மரபணுச் சோதனையிலும் முன்னேறி விட்டான். ஜீனோம் இரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டான்.
குரங்கின் மரபணுக்களையும், மனிதனின் மரபணுக்களையும் சோதனை செய்து பார்த்து இரண்டும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றது என்று நிரூபணம் செய்யப்பட்டிருந்தாலோ, வேறு எந்தப் பிராணியின் மரபணுவும் மனிதனின் மரபணுவுக்கு ஒத்ததாக இல்லை என்று உறுதி செய்யப்பட்டிருந்தாலோ டார்வினின் தத்துவத்தை ஓரளவுக்காவது நம்பலாம். அப்படி எந்த நிரூபணமும் இல்லை.
இன்னும் சொல்வதானால் ஜீனோம் கண்டுபிடிப்புக்குப் பின் முழு மனித குலமும் ஒரு ஆப்பிரிக்கத் தாயிலிருந்து தோன்றியவர்கள் தான் என்பதைக் கண்டுபிடித்து விட்டனர்.
குறிப்பிட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குரங்குகள் மனிதர்களாக மாறின என்பது டார்வினின் தத்துவம்.
முழு மனிதனுக்கும் ஒரே தாய் தான் என்ற கண்டுபிடிப்பு டார்வினின் கொள்கையைச் சவக்குழிக்கு அனுப்பி விட்டது.
மனிதன் ஒரு தாய் ஒரு தந்தையிலிருந்து பிறந்தவன் என்ற தத்துவம் உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்த உதவும். குலம், இனம், நிறத்தின் பெயரால் மனிதனுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பிப்பதைத் தடுக்கும். ஆனால் டார்வினின் தத்துவத்தைத் தாங்கிப் பிடிப்பது மனித குலத்துக்குக் கேடு விளைவிக்கும்.
'என்னுடைய முதல் தந்தையும் உன்னுடைய முதல் தந்தையும் வேறு வேறு' எனக் கூறி இன்று நிலவும் வேறுபாட்டை நியாயப்படுத்த முடியும்.
எனவே உலகுக்குக் கேடு விளைவிக்கும் உளறலே டார்வின் தத்துவம்.
 
இதையெல்லாம் விட உடல் அமைப்பால் மனிதன் என்ற பெருமையை மனிதன் பெறவில்லை. பகுத்தறிவால் தான் அந்தப் பெருமையைப் பெறுகிறான்.
உடல் வளர்ச்சிக்கும், உடலமைப்பில் மாறுதலுக்கும் தான் டார்வின் காரண காரியங்களைக் கூறுகிறான். பகுத்தறிவு இல்லாத உயிரினம் பகுத்தறிவு உள்ளதாக மாறுவதற்குரிய சூழல் - நிர்ப்பந்தம் எது என்று டார்வின் கூறவே இல்லை.
ஆடு, மாடுகளுக்கு இருப்பது போன்ற கழுத்தைத் தான் ஒட்டகச்சிவிங்கி பெற்று இருந்ததாம்! அதற்குத் தேவையான உணவுகள் உயரமான இடத்தில் இருந்ததால் கழுத்தை நீட்டி, நீட்டி வந்ததாம்! இதனால் படிப்படியாக கழுத்துப் பெரிதாகி பல கோடி வருடங்களில் இப்போது நாம் காண்பது போல் ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டதாம்! டார்வினிஸ்டுகள் உளறுகின்றனர்.
உலகில் உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்த நிலையில் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது என்பதை ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொள்வோம்.
இந்த வாதத்தின் படி உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்தத்தால் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது. ஆனால், பகுத்தறிவு இல்லாத ஜீவன் உயிர் வாழவே முடியாது என்ற நிர்ப்பந்தம் எப்போதாவது இருந்ததா? உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு அவசியம் என்ற நிர்ப்பந்தம் எப்போதும் இருந்ததில்லை. உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு தேவையே இல்லை. எனவே பகுத்தறிவு இல்லாத ஜீவன் பகுத்தறிவுள்ள ஜீவனாக மாறுகின்ற எந்த நிர்ப்பந்தமும் எந்தக் காலக் கட்டத்திலும் இருந்ததில்லை. உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு அவசியம் இல்லை என்னும் போது பரிணாம வளர்ச்சியினால் பகுத்தறிவு என்பது வரவே முடியாது. இந்தச் சாதாரண அறிவு கூட டார்வினுக்கு இருக்கவில்லை.
ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டதற்கு டார்வின் கூறும் காரணத்தையும் நாம் ஏற்க முடியாது.
யானையின் தும்பிக்கை ஏன் நீண்டது?
கங்காருவின் வயிற்றில் ஏன் பை வந்தது?
யானை மூக்கை நீட்டியதால் தும்பிக்கையாகி விட்டது என்பார்களா?
கடவுளை மறுப்பதற்காக எத்தகைய உளறலையும் தூக்கிப் பிடிப்பது தான் அறிவுடமையா? பரிணாம வளர்ச்சியினால் பல கோடி ஆண்டுகளில் குரங்கு மனிதனாக மாறியது என்றால் அந்த வளர்ச்சி தொடராமல் நின்று போனதற்கு என்ன காரணம்?
தினம் சில குரங்குகள் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் மனிதனாக மாறிக் கொண்டே இருக்க வேண்டும்; அல்லது தினந்தோறும் சில தாய்க் குரங்குகள் மனிதக் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். ஏன் அது தொடரவில்லை? இதற்கும் டார்வினிஸ்டுகளிடம் பதில் இல்லை.
மனிதன் பரிணாமம் பெற்று ஏன் இன்னொரு மேல் நிலையை அடையக் காணோம் என்பதற்கும் உளறல் தான் பதிலாகக் கிடைக்கின்றது.
மனிதனின் இரத்தம், இதயம், ஈரல், சிறுநீரகம் போன்ற உள் அமைப்புகளும், மரபணுக்களும் மனிதன் தனி இனம் என்பதையும். எந்த இனத்திலிருந்தும் அவன் பரிணாமம் பெற்றிருக்க முடியாது என்பதையும் சந்தேகமற நிரூபித்த பின்பும் டார்வின் உளறலை தூக்கிப் பிடிப்பவர்கள் சிந்தனையாளர்களாக இருக்க மாட்டார்கள்.
Source: Onlinepj

Thursday, March 8, 2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - அனாதை இல்ல கட்டிட வேலைகளுக்கும் , தலைமைக்கும் சொந்த இடம் வாங்க நிதி தாருங்கள் .....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை சார்பாக கடலூரில் நடத்தப்பட்டு வந்த அனாதை இல்லம் தற்போது நாகூரிற்கு இடம் மாற்றப்பட்டு இறைவனது கிருபையால் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் அனாதை இல்லத்திற்கென தனி கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டு தற்போது தஞ்சாவுர் மாவட்டம் சுமாமிமலையில் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தீவிரமாக நடைபெற்றுவரும் கட்டிட வேலைகள். கடந்த 3 ஆம் தேதி மாநில நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கட்டிட வேலைக்கு 20 லட்சம் வரை தேவைப்படுகின்றது. அனாதை இல்ல கட்டிட பணிக்காக தங்களின் நன்கொடைகளை வாரி வழங்கிடுவீர்!

 Click Here to donate 

உங்கள் பணத்தை இன்டர்நெட் பேங்க் மூலமாகவும் அனுப்பலாம் .. (எந்த வகைக்காக என்று குறிப்பிட்டு அனுப்பவும் )


TAMILNADU THOWHEED JAMATH,
INDIAN BANK,
A/C NO: 788274827,
MANNADY BRANCH.


தலைமைக்கு இடம் வாங்க தாராளமாக தந்து உதவுங்கள் - இமயம் டிவி நிகழ்ச்சி வீடியோ

 Click Here to donate 


உங்கள் பணத்தை இன்டர்நெட் பேங்க் மூலமாகவும் அனுப்பலாம் .. (எந்த வகைக்காக என்று குறிப்பிட்டு அனுப்பவும் )



TAMILNADU THOWHEED JAMATH,
INDIAN BANK,
A/C NO: 788274827,
MANNADY BRANCH.


Friday, February 24, 2012

லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வேலைக்காக காத்துள்ளனர்!!

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு விவரங்கள் சரிபார்த்துக் கொள்ள அரசு வேண்டுகோள்! சுமார் 2 

 வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் புதிய பதிவு, புதுப்பித்தல், கூடுதல் கல்வித் தகுதி பதிவு செய்தல் போன்ற பணிகள் அனைத்தும் தற்போது இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கான இணையதளம் முகவரி tnvelaivaaippu.gov.in ஆகும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் முன்பே பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ளவர்கள், புதுப்பித்தல் மற்றும் கூடுதல் கல்வித் தகுதியைப் பதிவு செய்வதுடன் மட்டுமல்லாமல், தங்களின் பதிவு விவரங்களையும் இணையதளம் வாயிலாகச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

பதிவுதாரர்கள் தங்களின் பதிவு விவரங்களில் ஏதேனும் திருத்தம் தேவை இருப்பின் அதனைச் சரிசெய்து கொள்ள உரிய சான்றுகளுடன் தாங்கள் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பு அலுலகத்தை ஏதேனும் ஒரு வேலைநாளில் அணுகி, தங்கள் பதிவு விவரங்களைச் சரிசெய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஜூன் 30, 2011 முடிய வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தமிழகத்தில் சுமார் 71 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். அதில்  2 லட்சத்திற்கும் அதிகமானோர் முஸ்லிம்கள்.

ஜாதி வாரியாக ...



சிறப்பு பிரிவுகள் வாரியாக ...



பட்டபடிப்புக்கு கீழ் ...



இளங்கலை பட்டதாரி ...



முதுகலை பட்டதாரி ...

 

Sunday, January 15, 2012

அல்லாஹ் பெயரால் பதவிபிரமாணம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! Read more about அல்லாஹ் பெயரால் பதவிபிரமாணம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


"அல்லாஹ் பெயரால் பதவி பிரமாணம் எடுத்தது அரசியல் சட்டப்படி செல்லும்" என அதற்கு எதிராக தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கு தொடுத்தவர்மீது 1 லட்சம் அபராதமும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.
2011 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி ஜார்கண்ட் மாநில ஆளுநராக சையதுஅஹ்மது "அல்லாஹ் கே நாம் பர்" (அல்லாஹ் வின் திருப்பெயரால்) என்று கூறி பதவிபிரமாணம் செய்தார். அரசியல் சட்டப் பிரிவு 159ன் கீழ் அல்லாஹ் பெயரால் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரி கமல் நாயன் பிரபாகர் என்ற மாணவர் ஜார்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்கு தொடுத்த அந்த மாணவர் சமூகங்களில் வேற்றுமையை ஏற்படுத்த முனைகிறார் என்றும் ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியது. ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மாணவர் கமல் நாயன் பிரபாகர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் எஸ்.ஜே. முகோ பாத்தியாயா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

அவர்களுடைய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"அரசியல் சட்டப் பிரிவு 159, ஒரு ஆளுநர் கடவுளின் பெயரால் அல்லது உளமாற உறுதி அளிக்கிறேன் என்று கூறிபதவிப் பிரமாணம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கிறது. ஜார்கண்ட் கவர்னராக சையது அஹ்மது 'அல்லாஹ் பெயரால்' பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவரது செயல் அரசியல் சட்டப் பிரிவு 159-ன் கீழ் எதிரானது அல்ல. அல்லாஹ் பெயரால் ஆளுநர் பதவி ஏற்றுக்கொண்டது அரசியல் சட்டப்படி செல்லத் தக்கதாகும்.

வழக்கு தொடர்ந்திருப்பவர் தீய எண்ணத்தோடு இந்த வழக்கைத் தொடர்ந்திருப்பதாக கருத இடம் இருக்கிறது. உலகம் முழுவதும் கடவுள் உருவமற்றவராகவே கருதப்படுகிறவர். அப்படி இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட உருவத்தின் பெயரால் ஆளுநர் பதவிப் பிரமாணம் ஏற்றிருக்க வேண்டும் என்று கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. 159-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுள் என்ற வார்த்தை ஒரு குறிப்பிட்ட கடவுள் வடிவங்களை மட்டும் கட்டுப்படுத்தாது. கடவுள் என்ற வார்த்தை அரசியல் சட்டப் பிரிவு 159-ல் மதசார்பற்ற முறையிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்ந்திருப்பவர் கடவுள் என்ற வார்த்தையை ஒரு குறிப்பிட்ட கடவுள் அல்லது உருவத்துக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று விவாதிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறோம். கெட்ட நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டிருப்பதால் வழக்குதொடர்ந்திருப்பவர் 1லட்ச ரூபாய் செலவுத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறோம்."
இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

America

TÖWqL YÛ[hPÖ Th‡›¥ ŒÁ\ AÙU¡eL ÚTÖŸeLT¥ —‰ ÚUÖ‰Y‰ ÚTÖX DWÖÁ TPhL· ÙNÁ\RÖ¥ TR¼\• ˜¼¿f\‰.

AÙU¡eL ÚTÖŸeLT¥

A„ EÛX ‘WopÛ] ÙRÖPŸTÖL AÙU¡eLÖ, DWÖÁ CÛPÚV ÚUÖR¥ ŒX°f\‰. DWÖÁ TÖRÖ[ AÛ\›¥ A„Ne‡ ŒÛXV†ÛR AÛU†‰ A„ h| RVÖ¡ef\‰ G] AÙU¡eLÖ h¼\•NÖy|f\‰. B]Ö¥ CÛR DWÖÁ U¿ef\‰. A„Ne‡ÛV BeL”ŸYUÖ] –Á E¼T†‡ ‡yPjLºeh TVÁT|†‰YRÖL i¿f\‰.

CR¼fÛP›¥ DWÖÁ A£f¨·[ KUÁ TÖWqL YÛ[hPÖ Y³VÖL AÙU¡eL ÚTÖŸeLT¥L· ÙNÁ¿ Y£fÁ\]. CR¼h DWÖÁ L|• G‡Ÿ“ ÙR¡«†‰ Y£f\‰. B]Ö¥ AÙU¡eLÖ C‹R G‡ŸÛT ÙTÖ£yT|†RÖU¥ A‹R Y³VÖL LP‹R YÖW• `Œï BŸ¦VÁÍ' GÁ\ ÚTÖŸeLTÛX AĐ‘V‰.

DWÖÁ TPhL· A†‰—\¥

CR]Ö¥ A‹R AÙU¡eL ÚTÖŸeLTÛX ÚSÖef DWÖÂÁ 3 A‡ÚYL «ÛNTPhL· ÚUÖ‰Y‰ ÚTÖX ÙNÁ\]. AÚR SÖ¸¥ hÛY†‰eh 75 fÚXÖ —yPŸ ŠW†‡¥ ÙNÁ¿ ÙLցz£‹R AÙU¡eL LPÚXÖW TÖ‰L֐“ TÛP LT¥ —‰• ÚUÖ‰Y‰ ÚTÖX DWÖÁ TPhL· ÚYLUÖL ÙNÁ\].

C‹R C£ N•TYjL· h½†‰ AÙU¡eL WÖ„Y†‡]Ÿ i¿ÛL›¥, ``AÙU¡eL ÚTÖŸeLT¨eh 500 —yPŸ CÛPÙY¸ ŠW• YÛW›¥ DWÖÁ TPhL· A‡ÚYL†‡¥ Y‹R]. pe]¥ ÙLÖ|†‰• AÛR AYŸL· ÙTÖ£yT|†R«¥ÛX. C‰ LP¥Y³ «‡˜Û\LÛ[ —¿• ÙNVXÖh•'' GÁ¿ i½]Ÿ. CÚRÚTÖÁ¿ hÛY† Th‡›¥ Y‹R DWÖÁ TPhL¸¥ G‹‡W ‰TÖefL·, H.ÚL.47 ‰TÖefL· h½ ÛY†RTz C£‹R] GÁ¿• AÙU¡eL A‡LÖ¡L· i½]Ÿ.

ÚU¨• DWÖÁ TPhL¸Á C‹R A†‰—\¥L· ÙRÖPŸTÖ] ®zÚVÖ TP†ÛR G|†‰ ÛY†‡£TRÖL°• AÙU¡eL LP¼TÛP›]Ÿ ÙR¡«†R]Ÿ.

TR¼\• ˜¼¿f\‰

CRÁ G‡ÙWÖ¦VÖL A‹R Th‡›¥ AÙU¡eL, DWÖÁ WÖ„Y†‡]¡ÛPÚV TR¼\UÖ] s²ŒÛX ˜¼¿f\‰.

Friday, January 6, 2012

இந்திய தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம்



வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளிகளுக்கான புதிய ஓய்வூதிய மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டத்திற்கு இந்திய நடுவணரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.
இந்த திட்டத்தின்படி, ஆண்டுக்கு ஆயிரம் முதல் பன்னிரெண்டாயிரம் வரை செலுத்தும் தொழிலாளர்களுக்கு இந்திய அரசின் பங்களிப்பாக ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும்.
பெண் தொழிலாளர்களுக்கு இந்திய அரசின் பங்களிப்பான ஆயிரம் ரூபாய் தவிர வெளிநாடுவாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் கூடுதலாக இன்னொரு ஆயிரம் ரூபாயும் அளிக்கப்படும்.
வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களை மனதில் வைத்து கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த திட்டம் அடிப்படையில் வரவேற்கத்தக்கது என்றாலும், வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இது போதுமானதாக இருக்குமா என்கிற சந்தேகம் தமக்கு இருப்பதாக கூறுகிறார் வளைகுடா நாட்டில் இருக்கும் இந்திய தொழிலாளர்களின் பிரச்சினைகளை பல ஆண்டுகளாக கையாண்டுவரும் அமைதி அறக்கட்டளையின் நிறுவன இயக்குநர் பால் பாஸ்கர் அவர்கள்.